பிரித்தானியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 20 வயது பெண் ஒருவர் இளம் எம்பியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் ஸ்கொட்லாந்திலிருந்து போட்டியிட்ட மேஹ்ய்ரி பிளாக்(Mhairi Black-20) என்ற பெண், அந்நாட்டின் மிக இளம் வயது எம்.பி.யாக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் வெளிநாட்டு விவகார செய்தி தொடர்பாளருமான டக்ளஸ் அலெக்சாண்டர் என்பவரை 5000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து மிகுந்த சந்தோஷத்துடன் இவர் கூறியதாவது, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பெரும் பிரச்சனையாக இருந்து வரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை பயின்று வரும் இவர், இன்னும் இறுதி தேர்வை எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.