Breaking
Sun. Nov 24th, 2024

ஏ.எச்.எம்.பூமுதீன்

முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக்க அன்று முஸ்லிம் காhங்கிரஸ் தலைவர் அஸ்ரபை அழித்தது போன்று இன்று அ.இ.ம.கா தலைவர் ரிசாத் சபதியுதீனை அழிக்க பாரிய சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை முறியடிக்க முஸ்லிம் சமுகம் ஒன்றுபட வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் முன்வைக்கபப்பட்டு வருகின்றது.

நாடு பூராகவும் உள்ள இளைஞர் அமைப்புக்கள் பொதுநல அமைப்புக்கள் உலமாக்கள் மற்றும் கல்விமான்களால் இந்த கோரிக்கை அழுத்ததமாக முன்வை;கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

மர்ஹூம் அஸ்ரப் அன்று முஸ்லிம் சமுகத்தின் விடிவுக்காகவும் உயர்ச்சிக்காகவும் எவ்வாறு துணிந்து செயற்பட்டாரோ அதேபோன்று ; இன்று ரிசாத் பதியுதீனின் செயற்பாடுகள் முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் விரிவடைந்து வருவது பலருக்கும் பெரும் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனவாதமும் மதவாதமும் பிடித்த ஒரு சில வெறியர்களாலும் ரிசாத் சார்ந்த ஒரு சில சமுக துரோகிகளும் ரிசாதை அழிக்கும் சதிகார கூட்டத்தின் பின்னணியிலிருந்து செயற்பட்டு வருவதாக அறியவந்திருப்பதாகவும் மேற்படி கோரிக்ககை விடுக்கும் சமுக உயர்மட்டத்தினரிடமிருந்து அறியவருகின்றது.

முகநூல்கள் வாயிலாகவும் இனவாதிகளை தலைமைகளாகக் கொண்ட ஓர் இரு ஊடகங்களாலும் இன்று அமைச்சர் ரிசாத் பதியுதீனை அவரது அரசியல் வாழ்க்கைக்கும் சமுகத்திற்காக அவர் கொடுக்கும் அவரது குரல் வளையை நசிக்கிவிடவும் சதிகாரக் கும்பல்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

மகிந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக மேற்கொள்ளபப்பட்ட அத்தனை அநீதிகளையும் துணிவுடன் எதிர்த்து சமுகத்தின் காவலானாக தலைநிமிர்ந்து நின்றவர் ரிசாத் பதியுதீன்.

எங்கு இவர் அஸ்ரபை போன்று ஒட்டு மொத்த சமுகத்தின் தலைவனாக மாறிவிடுவானோ என்ற அச்சம் கொண்ட சில மதவாத வெறியர்கள் இவரை அழிக்கும் சதித்திட்டத்தை அன்று ஆரம்பித்து இன்றுவரை முன்னெடுத்து வருpகன்றார்கள்.

நீதிமன்ற படிக்கட்டுக்களில் ஏறி சட்டத்தின் முன் கைகட்டி நிக்கும் நிலையிலிருந்து தனது சமுகத்திற்காக அத்துமீறி காணிகளை பெற்றுக் கொடுக்கின்றார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மகிந்த ஆட்சிக் காலத்தில் முற்றுப்பெற்று விட்ட வில்பத்து விவகாரம் இன்று நல்லாட்சியாக உருவாகியிருக்கும் அரசிலும் முடுக்கிவிடப்பட்டிருப்பது முஸ்லி;ம் சமுத்தினர் மத்தியிலும் ஏனைய பிற மதங்களைச்சேர்ந்த மிதவாத போக்குடையோர் மத்தியிலும் அரசியல் பிரமுகர் மத்தியிலும் பெரும்வேதனையை தோற்றுவித்துள்ளது.

மகிந்த ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த பொதுபலசேனாவுக்கு பதிலாக இன்று இந்த அரசில் சிங்கள ராவய எனும் இனவாத அமைப்பு மிக அழுத்தமாக தனது காலை பதித்துள்ளது.
இந்த அமைப்பு இந்தளவு தூரம் கால்பதிப்பதற்கும் வடக்கு முஸ்லிம்களை மீள் குடியேறவிடாமல் தடுப்பதற்கும் அதன் மூலம் அம்மக்களின் தளபதியான ரிசாதை அரசியல் ரீதியாக சங்கடப்படுத்துவதற்கும் நிம்மதி இழக்கச்ச செய்வதற்கும் பின்னணியில் அவரால் வளர்க்கப்பட்ட அரசியல் பிரமுகர் ஒருவர் இருப்பது வடக்கு முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமன்றி ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மத்தியிலும் ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் தான் மேற்சொன்ன உலமாக்களும் கல்விமான்களும் இளைஞர்களும் பொதுநல அமைப்புக்களும் முஸ்லிம் சமுகம் ஒன்றுபடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

தனது தனிப்பட்ட அரசியலுக்காக அன்றி தான் சார்ந்த ஒட்டுமொத்த சமுகத்திற்காகவும் துணிச்சலாக குரல் கொடுத்தமைக்காக ரிசாத் பதியுதீனை அழிக்க நினைக்கும் சதித்திட்டங்களுக்கு முற்றுப் புள்ளிவைக்கவும் அவருடன் ஒன்றிணைந்து அவரது கரங்களை பலப்படுத்தவுமே நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களை ஒன்று படுமாறு மேற்சொன்ன தரப்பினர் முஸ்லிம் சமுகத்திடம் அவசரமாக இவ்வேண்டுகோள முன்வைத்துள்ளதாக நம்பகமாக தெரியவருகின்றது.

Related Post