முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்
வில்பத்து தேசியவனத்தை அமைச்சர் றிசாத்பதியுதீன் அழித்து சட்டவிரோத முஸ்லிம் கிராமத்தை அமைத்து வருகிறார் என்ற போலிப்பிரசாரம் அம்பலமானது.
இச்செய்தி அண்மைக்காலமாக அதிகம் பேசுபொருளாக இருந்துவந்தது.இதற்குரிய சரியான பதிலை ஊடகங்களில் வழங்கியும் உரியவர்கள் புரிவதாக் தெரியவில்லை.
இவ்வ்டயத்தை வளரவிடாமல் தடுக்க உரியவிசாரணை;க் குழுவை அனுப்பி வைக்குமாறு மேதகு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடப்பட்டதற்கு இணங்க இன்று விசாரணைக் குழு களத்திற்குச் சென்று உண்மை நிலையைக் கண்டுகொண்டது.
அரச அதிபர் தேசப்பிரியவும்,முசலி;ப்பிரதேச செயலாளர் திரு.கேதீஸ்வரனும் வில்பத்துக் காணியில் எவ்வித சட்டவிரோத குடியேற்றமும் இடம்பெறவில்லையெனத் தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளனர்.
சுற்றாடல் அமைச்சின் குழுவினர்,ஜே.வி.பி.பிரதிநிதிகள் ஊடகவியலாளர் போன்றோர் வருகை தந்திருந்தனர்.சரித்திரத்தில் வனத்திடையேயுள்ள அழகிய கிராமம் எனப்படுவது இப்பிரதேசந்தான்.
முசலிப்பிரதேசக்கிராமங்களில் வளர்ந்திருப்பது 25 வருடக்காடுகள்.இவை முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் சின்னமாகும்.முசலிப்பிரதேச சரித்திரம் தெரியாது புதிதாக அங்கு செல்பவர்களுக்கு இயற்கைக் காடுகளை அழித்து அங்கு குடியேறுவது போன்ற மாயத்தோற்றம ஒன்றே தென்படும் இதுதான் இப்பிரச்சினையின் மையம்.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் அரசியல் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சில தீய சக்திகள் பின்புலத்தில் உள்ளன.இவ்விடயத்தில் வடபுல முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்காமல் முஸ்லிம் அரசியல் கட்சிகளும்,முஸ்லிம்பாராளும்ன்ற உறுப்பினர்களும் மெனனித்திருக்கின்றனர்.வடபுல முஸ்லிம்கட்கு நடந்த இனச்சுத்திகரிப்பு சரித்திரத்தில் மறக்காத. மன்னிக்கமுடியாத ஒரு நிகழ்வாகும்.
இந்த போலி பிரசாரத்தில் முக்கிய பங்காற்றிய ஹிரு தொலைகாட்சி அதன் உரிமையாளர் திமிந்த சில்வாவின் குடு வியாபாரம் பற்றி ஹிரு சி ஐ ஏ யில் எப்போது ஒளிபரப்பும் …