Breaking
Wed. Oct 23rd, 2024

வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டு வருவதாகவும் அங்கு மீழ் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாத் சட்டவிரோதமாக குடியமர்த்தி வருவதாக பொதுபல சேனா சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புகளும் சிங்கள ஊடகங்கள் சிலவும் அபாண்டமாக குற்றம் சுமத்திவரும் நிலையில் இன்று மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் லால் காந்த ,வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் நேரசியாக ஸ்தலத்துக்கு சென்று வன பாதுகாப்பு உயரதிகாரிகள் ,மாவட்ட செயலாளர் அங்கு வசிக்கும் மக்கள் உள்ளிட்டோரை சந்தித்தனர்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னனி மேல் மாகாண சபை உறுப்பினர் லால் காந்த அமைச்சர் ரிஷாத் அவர்களின் அனுசரணையில் வில்பத்து வனம் அழிக்கப்பட்டு வருவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது என இன்று அங்கு நேரடியாக விஜயம் செய்த குழுவுக்கு புலனாகியாத குறிப்பிட்டுள்ளார்.மேலும் அரச உயரதிகாரிகள் மற்று, பொது மக்கள் இதற்கு சாட்சியம் அளித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மஹிந்த ஆட்சியில் இஸ்லாத்தையும் குரானையும் விமர்சித்து வந்த  கடும்போக்கு வாதிகளுக்கு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளதால் முஸ்லிம்களை இலக்கு வைத்து மீழ் குடியேற்றம் தொடர்பான விடயத்தை கையில் எடுத்துள்ள கடும்போக்கு வாதிகள் அமைச்சர் ரிசாத் மீது சேறு வாரி இறைக்கும் ஒரு செயற்பாடு இந்த வில்பத்து விடயம் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

Related Post