Breaking
Wed. Oct 23rd, 2024

தஜிகிஸ்தான் நாடு அதிக அளவு முஸ்லீம்கள் வாழும் நாடாகும். இந்த நாட்டில் அதிகமான மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரேபிய பெயரை தான் சூட்டு கின்றனர்.பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர். தஜிகிஸ்தான் அரசு தனது நாட்டுமக்கள் தீவிரவாத செல்வாக்கில் இருந்து விடுபட முயற்சி எடுத்து வருகிறது.

இதற்காக தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் பாராளுமன்றத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அரேபியில் பெயர் வைப்பதை தடை செய்ய செய்யும் சட்டம் கொண்டு வர உத்தரவிட்டு உள்ளார் என கூறப்படுகிறது.

“விரும்பத்தகாத அரபு மற்றும் இஸ்லாமிய பெயர்கள்” வைக்க கூடாது என மசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது. முல்லா, கலீபா, ஷேக், அமீர் மற்றும் சுபி என்று இறுதியில் இனி பயன்படுத்த கூடாது.

பதிவு துறை அமைச்சகத்தை சேர்ந்த ஜலோலிதீன் ரஹிமோவ் கூறியதாவது:-

பெண் குழந்தைகளுக்கு பிரபலமான முஸ்லீம் பெயர்கள் சுமய்யா,ஆயிஷா மற்றும் ஆசியா, ஆண் குழந்தைகளின் பெயர் , யூசுப் மற்றும் அபுபக்கர் ஆகிய பெயர்கள் தடைசெய்யப்படும். இந்து பின்னர் ஒழுங்கு படுத்தப்படும்,பதிவு அலுவலகம் இந்த பெயர்களை இனி பதிவு செய்யாது. அதுபோல் அரபு வம்சாவளி பொருட்கள் தாவரம் -விலங்குகள் பெயர்களையும் இனி பதிவு செய்யாது என கூறினார்.

இந்த புதிய மசோதா பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தான் பொருந்தும். நாட்டில் மத சார்பின்மை குறித்து அதிகம் பிரசாரம் செய்து வரப்படுகிறது. தாஜிக் உச்சரிப்பு தரக்கூடிய பெயர்களை சூட்டுமாறு கூறப்பட்டு உள்ளது. அதற்கான பெயர் பட்டியல்களை அரசாங்கம் தயாரித்து உள்ளது.

Related Post