வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் இருந்து எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுதாதார மையம் அறிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய் வேகமாக பரவியது. தொற்று நோயான இந்த எபோலாவால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஐ.நா. சார்பில் சென்ற டாக்டர் மற்றும் உதவியாளர்களையும் இந்த நோய் விட்டு வைக்கவில்லை. இதனால் இந்த நோய் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இந்நிலையில் 14 மாதங்களாக கடும் இக்காட்டான நிலைக்கு தள்ளப்பட்ட லைபீரியாவில் இருந்து எபோலா முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபர்ரோ கூறும்போது ‘‘லைபீரியாவில் இருந்து எபோலாவை விரட்ட நீண்ட காலம் ஆகிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இங்கு எபோலா அறிகுறி ஏதும் இல்லை’’ என்றார்.இந்த கொடூர வைரஸ் நோய்க்கு 4700 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.