Breaking
Mon. Nov 25th, 2024

இலங்கையின் வடக்கே வில்பத்து பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தை அண்டிய பிரதேசத்தில் காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

வடக்கில் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் வேலைத்திட்டங்களின்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படாமல், ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்புள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பிரதேசங்கள் அழிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.

வடக்கு-இலங்கையில் காடுகள் அழிக்கப்படுவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலும் தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்துவருகின்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிபிசிக்கு அளித்த செவ்வி.

Related Post