Breaking
Wed. Oct 23rd, 2024

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (11) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் நாட்டின் பல்வேறு கரையோரங்களிலும் காற்றுடன் கூடிய மழைக்கு சாத்தியம் காணப்படுகிறது.  மேலும் வடக்கு மற்றும் கிழக்கு  கடலோரங்களில் காலையில்  மழைக்கான சாத்தியம் நிலவும் குறிப்பாக புத்தளம் மாத்தறை கொழும்பு ஊடாக காலி முதலான கடலோரங்களில் காலையில் மழை பெய்யலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தென்மேற்கு கரையோரமாக காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படலாம் எனவும் இக்காற்றின் வேகம் மணிக்கு  20 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறிப்பாக காலநிலை மாற்றத்தினால் திடீரென காற்றுஅதிகரிக்கப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் இக்காற்றின் வேகம் மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் நாட்டைச்சூழவுள்ள கடலோரங்கள் கடினமாக காணப்படாது என்றும் மிதமான காலநிலையுடனே காணப்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related Post