ஏ.எஸ்.எம்.ஜாவித்
கடந்த 25 வருடங்களாக அகதிகளாக இருந்து தற்போது மன்னார் சிலாவத்துறைப் பகுதியில் மீள் குடியேறும் மக்கள் வில்பத்துக் காணிகளை சட்ட விரோதமாக பிடிக்கின்றார்கள் என பல ஊடகங்களில் இனவாதிகள் பொய்ப்பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அதன் உண்மை நிலைகளை கண்டறிய “உடநடித் தீர்வுக்கான குழு” எனும் அமைப்பு சிலாவத்துறைப் பகுதிக்கு நேரடியாகச் சென்று அதன் அறிக்கைகளை பொதுமக்கள், கல்விசார் சமுகம், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள், சட்ட அறிஞர்கள் என்போருக்கு விளக்கும் நிகழ்வு RRTஅமைப்பின் தலைவர் சட்டத் தரணி சிறாஸ் நூர்டீன் தலைமையில் வெள்ளவத்தை மெரைன் கிறைன் ஹோட்டலில் நேற்று (12) ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது ஆர்.ஆர்.ரி அமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் சிலாவத்துறை முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்ற நிலைமைகளையும், அங்கு சட்டவிரோதமாக மக்கள் காணிகளைப் பிடிப்பதாக குறிப்பிட்ட பகுதிகள் இல்லையென்ற விளக்கத்தினையும் ஒளிப்படம் மூலம் விளக்குவதையும், ஆர்.ஆர்.ரியின் ஆய்வுக்குழுத் தலைவர் ஹில்மி அஹமட் வில்பத்து தொடர்பான ஊடக விளக்கத்தினை வழங்குவதையும், நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அமைச்சர் றிஷாத் பதியுதீன், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் உட்பட பலர் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதையும் படங்களில் காணலாம்.