நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 ஆயிரம் பேரை இழந்து, அதன் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் நேற்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதியம் சுமார்12.30 மணியளவில் தலைநகர் காத்மாண்டில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் வடகிழக்கு பகுதியில்
7.3-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக இருந்தது தற்போது 42-ஆக அதிகரித்துள்ளது. 1,117 பேர் படுகாயங்கம் அடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.