கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் குடியேறிகளை மீண்டும் கடலில் தள்ளிவிட வேண்டாமென தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுஸைன் கேட்டுள்ளார்.
இந்நாடுகளின் கொள்கைகள் பயங்கரமானதாக உள்ளது. படகுப் பயணம் மேற்கொண்ட குடியேறிகள் ஆறாயிரம் பேர் வரை, கடலில் தத்தளித்துக் கொண்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இவர்களது உயிரைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
சட்டவிரோதக் குடியேறிகள் எண்ணூறு பேர் வரை, இந்தோனேசியா வந்தடைந்த சிறிது நேரத்தில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் பங்களாதேஷைச் சார்ந்தவர் களும், அடக்குமுறை, அச்சம் காரணமாக மியன்மாரிலிருந்து வெளியேறும் ரொஹிங்யா முஸ்லிம்களும் உள்ளனர்.
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் கடுமையான மனித உரிமை நிலைமைகள் குறித்து மியன்மார் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.