Breaking
Sun. Nov 24th, 2024
வில்பத்து காட்டுப்பகுதிக்கும் முசலி பிரதேசத்தில் மீள்குடியேறிவரும் மக்களுக்கும் எதிராக சில சிங்கள ஊடகங்கள் மேற்கொண்டுவரும் விசமப்பிரசாரத்துக்கும் எவ்வித தொடர்புகளுமில்லையென்றும் இது கடந்த கால கடும் போக்கு அமைப்புக்களின் செயற்பாட்டின் மற்றுமொரு வெளிப்பாடாகும் என்றும் முசலி பிரதேச மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முசலி பிரதேசத்தில் மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி மற்றும் அதனோடு தொடர்புபட்ட கிராமங்களில் தற்போது முசலி பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மற்றும் இடம் பெயர்வுக்குள்ளான மக்கள் மீள்குடியேறிவருகின்ற போது அதற்கு எதிராக பல மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னார் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களும்,கடும் போக்கு அமைப்புக்களும் மேற்கொண்டுவரும் இந்த செயற்பாடுகள் இந்த பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்துக்கு பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளதாக முசலி பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
அண்மைய சில தினங்களாக சிங்கள அமைப்புக்களும்,பௌத்த துறவிகளும் படையெடுத்து முசலியில் உள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு வருவதானது இந்த மக்களுக்கு அச்சத்தையேற்படுத்தியுள்ளதாகவும்,பேருவளை அளுத்கமையினை போன்று இங்கும் இந்த நிகழ்வுகள் இடம் பெறலாம் என்றும் இம்மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் இந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.அப்போது இம்மக்கள் ஊகடவியலாளர்களிடத்தில் இவ்வாறு கூறினார்.
தாங்கள் இனி இடம் பெயர முடியாது என்றும் எங்களது வாழ்விடங்களின் உரிமையினை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இம்மக்கள் கோறிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

Related Post