தெற்கு மதீனா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் பெண்களுக்கான ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 181 மாணவிகள் கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் பள்ளிக் கூடம் செல்ல மறுத்துள்ளனர்.
அந்த பள்ளிக் கூடத்தில் ஜின்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அதனால் தாங்கள் அந்த பள்ளிக்கு செல்ல முடியாது என்று அச்சம் தெரிவித்துள்ளதாக சவூதியின் பிரபல ஆங்கில இணையதளமான ‘அரப் நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறது.
இது குறித்து மண்டல கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரனையில் ஏதோ ஒன்று தங்களை பிடித்து உலுக்கியது போல உணர்ந்ததாகவும்,அதன் விளைவாக மயக்கமடைந்ததாகவும் மாணவிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மாணவிகளின் வரத்து குறைந்து வருவதால் தேர்வுகள் நடத்த முடியாத நிலையில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.இன்னும் அந்த இடம் பள்ளிக்கூடம் நடத்துவதற்கு உகந்தது அல்ல எனவும் ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்.
கல்வித்துறை அந்த மாணவிகள் தேர்வு எழுதுவதற்கான மாற்று ஏற்பாடுகளை பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.