Breaking
Sun. Nov 24th, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

2014 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யத் தவறிய வாக்காளர்களை மீண்டும் தேர்தல் இடாப்பில் உள்வாங்கும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றைகொண்டுவரதுரிதநடவடிக்கைமேற்கொள்ளப்படுகின்றது.

அ.இ.ம.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீனீன் வேண்டுகோழுக் கிணங்க நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதற்கான நடவடிக்கையை மேற்கெண்டுள்ளார்.

கடந்த  சில தினங்களுக்குமுன்னர் நீதியமைசசர் ராஜபக்சவை அமைச்சர் றிசாத்பதியுத்தீன் சந்தித்து இந்தவிடயத்தை சுட்டிக்காட்டியதுடன் இது தொடர்பானஅவசரநடவடிக்கைஎடுக்குமாறு கோறியிருந்தார்.

அமைச்சர் றிசாத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்ட நீதியமைச்சர் ராஜபக்ச இந்த விடயத்தை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இச்சந்திப்பின் தொடர்ச்சியாக இன்றுகாலை (18) நீதியமைச்சில் நீதியமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் திணைக்களஅதிகாரிகள் கொண்ட கூட்டமெனறமும்; அமைச்சர் றிசாத்தலைமையில் சந்திப்பு ஒன்றுநடைபெற்றது.

இது தொடர்பானதிருத்தும் சட்டத்தின் துரிதநடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுதொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டு முடிவும் செய்யப்பட்டது.

இச் சந்திப்பில் அ.இ.ம.காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ. ஹமீட்,பிரச்சாரசெயலாளர் சுபைதீன் ஹாஜியாரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Post