கடந்த அரசாங்கத்தின் பிரமுகர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பாரிய அளவில் பணத்தை பதுக்கிவைத்துள்ள விதம் தொடர்பாக பொது சமாதான மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க வெளிப்படுத்தியுள்ளார்.
கம்பஹா – திவுலப்பிட்டி கட்சி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இவ்வாறான முறையற்ற நிதி வைப்பீடுகள் தொடர்பிலான சர்வதேச ரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அது தொடர்பான பொறுப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உலக வங்கியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.