அஸ்ரப் ஏ சமத்
நிதி அமைச்சர் ரவி கருநாயக்க கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பில் சிறுபான்மை வர்த்தகர்கள் தமது வர்த்தக நிறுவனங்களை புதிதாக ஆரம்பிக்கவோ, அல்லது வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் முதலிடவோ மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அதற்குரிய சர்ந்தாப்பங்கள் வழங்கப்படவில்லை.
ஆனால் திட்டமிட்டு சிறுபான்மையினரின் வர்த்தக நிறுவனங்களை எவ்வாறு மூடவைக்காலாம், அல்லது நஸ்டமாக்கலாம், பற்றவைக்கலாம் பாரிய வரிகளை அவர்கள் மேல் சுமத்தி வர்த்தகர்களை ஒழித்துக் கட்டுவார்கள். அல்லது சட்டவிரோத வியாபார நிறுவனம், என்ற ரீதியில் உடைத்து தள்ளுவார்கள் இதனையே அவர்கள் திட்டமிட்டு இனரீதியாக செயல்பட்டார்கள். என நிதியமைச்சர் ரவி கருநாயக்க தெரிவித்தார்.
நேற்று பம்பலப்பிட்டியில் விசாக வீதியில் றிஸ்வான் கௌசின் ஜரோப்பிய மற்றும் ஸ்பாணிய கம்பணியின் ‘லூஸ்’ எனும் சுகபோக லைட்டிங் சிஸ்டம் வர்த்தக நிறுவனத்தை திறந்து வைத்தே மேற்கண்டவாறு நிதிஅமைச்சர் ரவி கருநாயக்க தெரிவித்தார்.
ஜனாப் றிஸ்வான் கௌஸ் கொழும்பில் உள்ள பாரிய ஹோட்டல்களின் லைட்டிங் சிஸ்டம்துறையில் கடந்த 25 வருடமாக அனுபவத்தை பெற்று முதன் முதலில் இலங்கை மாலைதீவு நாடுகளுக்கு கொழும்பில் ஒரு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இந் நிறுவனத்தில் 3500க்கும் மேற்பட்ட மேலைத்தேய லைட்டிங் இந் நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.