மெளலவி செய்யது அலி ஃபைஜி
இரு தினங்களுக்கு முன்பு ரியாத் யாமாமா மாளிகையில் அரபுநாடுகளின் பராளமன்ற கூட்டமைப்பின் தலைவரை வரவேற்று சவுதி மன்னர் சல்மான் ஆற்றிய உரை உலக முஸ்லிம்களின் உள்ளத்தை தொடுவதாக அமைந்தது
சவுதி அரேபியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என் மீது ஏராளமானன பொறுப்புக்கள் இருக்கிறது
அந்த பொறுப்புகளில் முக்கியமானதும் முதன்மையானதும் நமது அகீதாவை (கொள்கை) பாது காப்பதாகும்
அதர்க்காக என்னவெல்லாம் என்னால் செய்ய முடியுமோ அவைகள் அனைத்தையும் இறையருளால் நான் செய்வேன்
சவுதி அரேபியா வஹி இறங்கிய புண்ணிய தலங்களை உள்ளடக்கிய நாடாகும்
அந்த புண்ணிய தலங்கள் அரபிகளுக்கு மட்டும் புண்ணிய தலமல்ல அனைத்துலக முஸ்லிம்களுக்கும் அது புண்ணிய தலமாகும்
அதனால் தான் நான் சொல்கிறேன் சவுதி அரேபியா அரேபிகளின் தேசம் மட்டுமல்ல அனைத்துலக முஸ்லிம்களின் தேசமாகும்
உலக முஸ்லிம்கள் அனைவர்களும் என் உடன் பிறவா சகோதரர்களாகும்
என்னுடைய சக்திக்கு உட்பட்டு என் சகோதரர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அவைகளை செய்வதில் நான் எந்த குறையும் வைக்க போவதில்லை
என்ற அவரது உரை உலக முஸ்லிம்களின் மனதை தொடுவதாக அமைந்தது அவரது இந்த உரை டுவிட்டர் தளத்தில் அமோக வரவேர்ப்பை பெற்றிருக்கிறது