Breaking
Wed. Oct 23rd, 2024

புகைப்பழக்கத்தை குறைக்க பயன்படுவதாக கூறி விற்கப்படும் இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சிகரெட் ஏற்படுத்தும் அதே உடல்நல கேடுகளை விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் தொராசிக் சொசைட்டியின் சார்பாக அலபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேனியல் சல்லிவன் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இ-சிகரெட்டில் உள்ள எரிக்கும் இயந்திரம், அதன் வெளியிடும் பகுதி மற்றும் அதில் பயன்படுத்தப்படும் நீராவி வடிவிலான நிகோடின் ஆகியவை சேர்ந்து, சாதாரண சிகரெட்கள் ஏற்படுத்தும் அதே அளவிலான உடல் நல கேடுகளை விளைவிக்கும் என தெரிய வந்துள்ளது.

இ-சிகரெட் புகைப்பதன் மூலம் வரும் கேடுகளை பற்றி போதுமான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. எனவே பொது மக்களுக்கு அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி முழுமையான புரிதல் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post