நாட்டில் மீண்டும் யுத்தம் பெறுவதனை தடுக்கும் முழுப் பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்..
யுத்தம் ஒன்று மீளவும் இடம்பெறுவதனை தடுக்கும் பூரண பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பிலான தேசிய நினைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராகவே ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் மிளவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் அந்த வலயத்தில் உடைந்த பாதைகளையும் பாலங்களையும் கடந்த அரசாங்கம் புனரமைத்துள்ள போதிலும், உடைந்த இருதயங்களை புனரமைக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை முடிவுறுத்திய பெருமை அனைத்து அரச தலைவர்கள் மற்றும் முப்படையினர், காவல்துறையினரைச் சாரும் என மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.