மௌலவி செய்யது அலி ஃபைஜி
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தி மன்னர் சல்மான் அவர்கள் நேபாளுக்கு மனிதநேய உதவிகளை வழங்க செம்பிறை சங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து முதல் கட்ட உதவியாக நேபாளில் 200 கூடாரங்கள் அமைத்து 15 டன் உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.
நேபாள் ஒரு இந்து நாடாக இருந்தாலும் சவூதி அரேபியா 100 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட நாடாக இருந்தும் நேபாள் மக்களுக்காக மனிதநேய பணிகளை வாரி வாரி வழங்கியுள்ளது.
நேபாளுக்காக அண்டை நாடான இந்தியா போதிய உதவிகளை செய்யாமல் வீண் வதந்திகளையும், விளம்பரங்களையும் பரப்பியதால் நரேந்திர மோடியின் உருவ பொம்மை நேபாளில் எரிக்கப்பட்டு உலக அரங்கில் இந்தியாவிற்கு கெட்டப்பெயரையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியது.
அதே சமையம் நேபாளுக்காக அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி நாடுகள் எவ்வித உதவிகளும் செய்யாத சூழலில்….
சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான், மலேசியா என்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளும் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள முஸ்லிம் அமைப்புகளும் நேபாளுக்காக வாரி வழங்கியுள்ளார்கள்.
அப்படியிருந்தும் இது சம்பந்தமாக ஒரு பத்திரிக்கை கூட முஸ்லிம்களின் மனிதநேய சேவை பற்றி ஒரு வரிக்கூட வாய்திறக்கவில்லை.
ஊடகங்கள் வாய் திறக்காவிட்டாலும் ஏகனாகிய அல்லாஹ் அதற்கான கூலியாக முஸ்லிம்களுக்கு மென்மேலும் செல்வ வளத்தை இம்மையிலும், நன்மைகளை மறுமையிலும் வாரி வழங்குவானாக….