அஸ்ரப் ஏ சமத்
இன்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் ஜ.தே.கட்சியின் தலைமைக் காரியலயமான ‘சிறிகொத்தவில்’ ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவரிடம் என்னால் எழுப்பட்ட கேள்வி –
கௌரவ பிரதம மந்திரி அவர்களே – வடக்கு முஸ்லீம்கள் மீள் குடியர்த்தும் விடயத்தில் நீங்கள் இன்னும் அமைதியாகவே இருக்கின்றீர்கள் ? வில்பத்து விடயத்தினை ஒரு இன பிரச்சினையாக சிலர் முன்னெடுக்கின்றனரே ?
பிரதமர் ரணில் பதில் – இல்லை இந்த விடயத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதனை கையாளுகின்றனர். அவரே சுற்றாடல் சூழல் பாதுகாப்பு அமைச்சர் அவர் அவரது அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து வில்பத்து விடயங்களை ஆராய்கின்றார். ஆகவே தான் இவ்விடயத்தில் நான் தலையிட அவசியமில்லை. என கூறினார்.