வில்பத்து விவகாரம் தொடர்பில் சிங்கள சமகத்தில் மத்தியில் இருந்த ஐயப்பாட்டை ஓரளவாவது நீக்கிய அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் அது தொடர்பான விளக்கங்களை வழங்கும் பொருட்டு TNL தொலைக்காட்சியில் இடம்பெறும் ஜனஹன்ட நேரடி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
இன்று திங்கள் கிழமை இரவு 9.30 மணிக்கு குறித்த ஜனஹன்ட நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
அம்பாறை மாவட்டம் தீகவாபி தொடர்பில் அன்று சிங்கள மக்கள் மத்தியில் எழுந்த சர்ச்சைக்கு குறித்த தொலைக்காட்சி ஊடாகவே முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஸ்ரப் உரிய விளக்கங்களை வழங்கி ஏற்படவிருந்த சிங்கள முஸ்லிம் இனக் குரோதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
அந்த ரீதியில் நாளை அமைச்சர் றிஷாத் பதியுதீன் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றி சிங்கள சமுகத்தின் மத்தியில் உள்ள ஐயப்பாட்டுக்கு மேலும் தெளிவை ஏற்படுத்தவுள்ளார்.
இவ்வாறு இருக்கத்தக்கதாக மீண்டும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் இன்று புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திற்கு சென்ற இனவாத பௌத்த அமைப்புக்கள் அங்கு மீள்குடியேறியுள்ள வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் அம்மாவட்ட சிங்கள மக்கள் மத்தியில் சென்று இனவாதக் கருத்துக்களை கக்கி மீண்டும் சிங்கள முஸ்லிம் சமுகம் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த தூபமிட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் அமைச்சர் ரிறிஷாத் பதியுதீன் ஆதிக்கம் அதிகரிக்கின்றது என்றும் வடக்கு முஸ்லிம்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார் என்று இனவாத தோரணையில் கருத்துக்களை விதைத்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் றிஷாத் பதியுதீன்; ஹிரு தொலைக்காட்சிக்கு சென்று தமது பக்க நியாயங்களை முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியிலிருந்த சந்தேகங்களுக்கு உரிய ஆக்கபூர்வமான நியாயங்களை வழங்கியிருந்தார்.
இதனை சகித்துக் கொள்ள முடியாத இனவாதக் கூட்டம் மீண்டும் குழப்பத்தை உண்டுபண்ணும் நோக்கில் புத்தளத்தில் சென்றுள்ளனர். இவர்களின் இனவாத திட்டத்தை மீண்டும் முறியடிக்க இன்று இரவு 9.30 மணிக்கு TNL தொலைக்காட்சியின் நேரடி நிகழ்வான ஜனஹன்டவில் றிஷாத் பதியுதீன் பங்குகொள்கிறார்.