மிஹின் லங்கா பயணிகள் விமானத்தில் பணிபுரியும் இந்திய விமானி மீண்டும் ஒருமுறை தமது உறுதிமொழியை தகர்த்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிஹின் லங்கா விமானியான கப்டன் வாஹ், ஏற்கனவே இரண்டு தடவைகள் விமான ஓட்டத்தின் போது நித்திரை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார்.
இதன்பின்னர் அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கப்பட்டார்.
இந்தநிலையில் தாம் இனிமேல் விமானப் பயணங்களின் போது நித்திரை செய்ய மாட்டேன் என்று அவர் எழுத்துமூலம் உறுதியளித்திருந்தார்.
எனினும் பங்களாதேஸ் – கொழும்புக்கு இடையிலான சேவையின் போது அவர் நித்திரை கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதியும் அவர், சார்ஜா- கொழும்பு சேவையின் போது தமது அறையை தாழிட்டு நித்திரை கொண்டதும் பின்னர் அவசர கதவின் ஊடாக சென்று அவரை ஏனைய விமானிகள் எழுப்பிய சம்பவமும் குறிப்பிடத்தக்கவையாகும்.