ஜப்பானில் இன்று (25) திங்கட்கிழமை காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என ஜப்பான் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கே சைத்தாமா என்ற பகுதியில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் கட்டிடங்கள் சிறிது ஆட்டம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் இதுவரையில் இல்லை.
கடல் அடியில் 51 கிலோ மீற்றர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு ஏற்பாடாக டோக்கியோ எங்கும் ரயில் போக்குவரத்தும் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.