இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த மூவாயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதில் 65 முறைப்பாடுகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமது பதவிகாலம் ஆரம்பமானபோது தினம்தோறும் சுமார் 200 முறைப்பாடுகள் வரை கிடைத்தபோதிலும் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இலட்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சுமார் 65 முறைப்பாடுகள் வரை தினமும் கிடைப்பதாக அதன் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்ந்தும் சிறப்பான முறையில் இயங்கிவருவதால் மக்கள் முறைப்பாடுகளை செய்ய முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.