Breaking
Wed. Oct 23rd, 2024

ஏ. எச்சித்தீக் காரியப்பர்

உண்மைகள் ஊர்சுற்றி வரும் வரையும் அரங்கேறிக் கொண்டிருக்கும் பொய்மைகளானது எப்போது உண்மைகள் வந்து வாசற் கதவை தட்டுகின்றவோ அப்போதிருந்தே இல்லாத இடம் தெரியாமல் போய் விடும் என்பார்கள் அல்லவா? அதுபோன்ற சம்பவம் ஒன்றுதான் இன்று வில்பத்து விவகாரத்தில் இடம்பெற்றுள்ளது.

வில்பத்து தேசிய வனப் பகுதியில் அமைச்சர் றிஷாத்தின் அனுசரணையில் பாரிய மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பச்சை நிர்வாணப் பொய்களை சிங்கள இனவாதிகள் அவிழ்த்து வந்த நிலையில் சிங்கள இணையமான நெத் எம். எப். இன்று இந்த விடயத்தின் பின்னணியை அம்பலப்படுத்தியுள்ளது.

வில்பத்து தேசிய வனத்தில் மேற்கொள்ளப்பட்ட மரங்களை வெட்டுதல், கடத்தல் தொடர்பிலான உண்மைகள் வெளிச்சத்தில் என்ற கருத்துப்பட அந்த இணையம் படங்களின் ஆதாரங்களுடன் தகவலை வெளியிட்டுள்ளது.

வில்பத்து பிரதேசத்தில் வன அதிகாரிகள் மேற்கொண்ட திடீர்ப் பாய்ச்சலின் போது மூன்று லட்சம் ரூபா பெறுமதியான மரங்களை அவர்களால் கைப்பற்ற முடிந்துள்ளது. இந்த மர தறிப்புடன் தொடர்புடையவர்கள் ராஜாங்களை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை வன இலாகா அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் அந்த இணையம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பெரும்பாலும் எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதனை விளக்கி தீர்ப்பு வழங்குவதற்கு இங்கு எந்த பஞ்சாயத்தும் தேவை இல்லை.

அமைச்சரி றிஷாத்தையும் முஸ்லிம்களையும் முடிச்சுப் போட்டு வில்பத்து காட்டை அழித்து குடியேற்ற முயற்சிகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கும் தென்னிலங்கை இனவாத சக்திகள் இப்போது என்ன கூறப் போகிறார்கள். எங்கே அந்த பசுமைப் புரட்சியாளர்களும் இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்களும் சுற்றாடல் அவதானிகளும்?

வில்பத்து தொடர்பாக இன்று இனவாதிகளால் சுமத்தப்படும் அனைத்து அபாண்டங்களின் உண்மை நிலைமைகளை அவர்களே வெளியிட்டு அவர்களே புரிந்து, வருந்திக் கொள்ளும் கொள்ளும் காலம் தூரத்தில் அல்ல.

Related Post