வாழைச்சேனை நிருபர்
கொரிய நாட்டின் நிதி உதவியில் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட ‘கொய்க்கா’ வேலைத்திட்டத்தின் கல ஆய்வினை மேற்கொள்ளும் கொரிய நாட்டு தூதுக்கழு நேற்று (21) வருகை தந்தனர்.
வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஓட்டமாவடி பிரதேச சபையின் சபையின் செயலாளர் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களையும் சந்துத்து தமது இறுதி அறிக்கையினை தயாரிக்கு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லையை ஊடருத்துச்செல்லும் வடிகான் தொடர்பான குறை நிறைகளை கேட்டறிந்ததுடன் குறித்த இடங்களையும் பார்வையிட்டனர்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட வடிகாங்களுக்கு மூடியிடல், மாஞ்ச்ஞ்சோலை பதுரியா ஓடையை தடுப்புச்சுவர் அமைத்து பாதுகாத்தல், ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குற்பட்ட பிரதான மாதுறு ஓய கிலையாற்றின் குடியிருப்பு சார்ந்த ஓரங்களுக்கு அணைக்கட்டு அமைத்தல் என்பனவற்றிற்கு தீர்வு காணப்பட்டு அடுத்த கட்ட கொய்க்கா செயல் திட்டத்தில் இவை பூரனப்ப்டுத்தப்படும் என திட்ட ஆய்வாளர்களால் உறுதியளிக்கப்பட்டதுடன் பின்தங்கிய கிராமங்களுக்கும் வடிகால் திட்டத்தினை கொண்டு செல்வதற்கும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இவ் வாய்வினை மேற்கொள்ள கொரிய சூழல் மற்றும் அபிவிருத்தி ஆய்வு மைய பிரதிநிதி கலாநிதி சாய் டாங் ஜின், கொரிய பூலோக அபிவிருத்தி ஆலோசனை நிலைய பிரதிநிதிகளான சோ யூன் ஜின், லீ டூ ஹோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட், உப தவிசாளர் ஏ.எம். நௌபர், ஏ.எல். ஜுனைட் நளீமி, ஐ.ரீ. அஸ்மி, எஸ்.ஏ. அன்வர் ஆசிரியர் , வாழைச்சேனை பிரதேசபை செயலாலளர் ஷிஹாப்டீன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இரண்டு நாட்களுக்கு தங்கி நிற்கும் இக்குழு பிரதேச செயலாளர்கள், பயனாளிகள், ஆகியோரையும் சந்திப்பதுடன் சம்பந்தப்பட்ட இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை தயாரிக்கவுள்ளனர்.