Breaking
Sat. Sep 21st, 2024

அஸ்ரப் ஏ சமத்

பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்லவே நாம் ;விரும்புகின்றோம். 100 நாட்கள் முடிந்து தற்பொழுது 150 நாட்கள் கடந்து விட்டன. இன்னும் காலம் தாழ்த்துவதை ஜ.தே.கட்சி ஒருபோதும் விரும்பவில்லை.

அடுத்த பாராளும்னறத் தேர்தலில் நாம் கட்டாயம் வெற்றி பெற்று பெரும்பான்;மை ஆசனத்தினை பெற்று ஆட்சியில் அமர்வோம் அதில் மீண்டும் பிரதமராக ரணில் பதவி வகிப்பார். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும். என ஜ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

நேற்று பி;.பகல் ஜ.தே.கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ;நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் கபீர் ;காசீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந் மாநாட்டில் அமைச்சர் லக்ஷ;மன் கிரியெல்லவும்; கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த கட்சியின் செயலாளர் கபீர் காசீம்.
எதிர்கட்சியினர் சிலர் இறுதிவரையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உச்ச வெற்றிக்காகவே உழைத்தவர்கள் மேலும் அவர்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை எவ்வாறேனும் தோற்கடித்து அவரை இல்லாமல் செய்வதற்கு பாடுபட்டவர்களே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால வெற்றிபெற்றதும் அவருடன் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த ஜனாதிபதியை ஆட்சியில் 64 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொடுத்து ஜனாதிபதியாக்கிய பெருமை ஜ.தே.கட்சி மற்றும் இதர சிறுபான்மைக் கட்சிகளைச் சாரும்.

எதிர்கட்சியினர் 20 ஆவது திருத்தச் சட்டத்தையை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்த பின்னர் அதனை அமுல்படுத்திய பின் உடன் பாராளுமன்றத்தை கலைப்பது என்ற நிலையில் இருந்தவர்கள் தற்போது அந்த நிலையில் இல்லை.

இத் தேர்தல் சீர்சிருத்தத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் அங்கம் வகிக்கின்ற சிறுகட்சிக்களுக்குள் இதுவரை இத் திருத்தம் சம்பந்தமாக ஒருமைப்பாடு இதுவரையும் ஏற்படவில்லை. இத் தேர்தல் சீர்திருத்தத்தை வைத்து காலம் தாழ்த்துகின்றனர் மேலும் பாராளுமன்றத்தில் காலத்தை அவர்கள் தக்க வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர்.

அதற்கிடையில் பிரதமருக்கு எதிராகவும், அமைச்சர்களுக்கு எதிராகவும் நம்பிக்கை இல்லாப் பிரேரனை என்று சொல்லிக் ;கொண்டு ஆனால் கடந்த ஆட்சியில் அவர்கள் செய்த ஊழல் மோசடிகளினால் அவர்கள் அடுத்த முறை பாராளுமன்றத்தில் தமது தேர்தல் தொகுதிகளில் மக்கள் அவர்களை ஆதரிக்க தயார் இல்லை. இவர்கள் தற்போதைய ஜனாதியிடம் சேர்ந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரல்களுக்கமைய செயல்படுகின்றனர்.

ஜ.தே.கட்சிக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவாக உள்ளனர். கடந்த மே தின கொண்டாட்டத்தில் இதனை நாங்கள் ஒப்புவைத்தோம். ஜ.தே.கட்சி கடந்த ஜனாதிபதி வெற்றி பெற்று ஜனவரி 9ஆம் திகதியே பாரளுமன்ற தேர்தலுக்கு செல்வதற்கு நாம் விரும்பியிருந்தோம். இருந்தும் ஜனாதிபதியின் 100 நாள் திட்டத்திற்காகவே அமைச்சரவை நிறுவி அதன் ஊடாக சில வேலைகளைச் செய்துள்ளோம். .

தற்பொழுது 150 நாட்கள் கடந்து விட்டன. ஆகவேதான் ஜனாதிபதிக்கோ எதிர்கட்சியினருக்கு எமது நிலைப்பாட்டினை ஊடகவியலாளர் ஊடாக இங்கு தெரிவிக்கின்றோம். உடனடியாக தேர்தல் சீர்சிருத்ததை20 சர்த்தை கொடுவருவதற்கு தாமதித்தால் அதனை கைவிட்டு இருக்கின்ற முறையே இருக்கட்டும் உடன் பாராளுமன்றத்தினை கலைத்து தேர்தலுக்கு வாருங்கள். நாங்கள் ஒருபோதும் இந்த அமைச்சரவையில் இருந்து கொண்டு அலங்கரிக்க விரும்பவில்லை. என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

Related Post