சில தினங்களுக்கு முன்பு சவுதியின் ஜித்தா மாநகரில் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் முக்கிய அமீகளுக்கு மத்தியில் சவுதி மன்னர் சல்மான் உரையாற்றும் போது குறிப்பிட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் அவரின் மார்க்க பற்றை பரை சாற்றுவதாக அமைந்தது
என் இனிய சகோதரர்களே நாம் புனித தலங்களை சுமந்த ஒரு நாட்டின் நிர்வாக பொறுப்பில் இருக்கிறறோம் நீங்கள் ஒவ.வொருவரும் உங்கள் கடமைகளை உணர்ந்து சரியாக பணியாற்றியாக வேண்டும் நமது நாட்டை சுற்றி சில நாடுகளிலும் உலக நாடுகளிலும் பல்வேறு சவால்களை எதிர் கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம் நாம் ஒவ்வொரு அசைவிலும் மிகுந்த கவனம் தேவை படுகிறது
இறைவன் நமக்கு வழமான பொருளாதாரத்தை வழங்கியுள்ளான் அந்த பொருளாதாத்தை நமது நாட்டு மக்களின் மேம்பாட்டிர்கும் முன்னேற்றத்திர்கும் செலவு செய்வது எவ்வளவு முக்கியமோ அது போன்று நமது மார்கத்தின் மேம்பாட்டிர்காகவும் வழர்ச்சிக்காகவும் அந்த பொருளதாரத்தின் ஒரு பகுதியை செலவு செய்வதும் அவசியமாகும்
நாங்கள் எங்கள் பொறுப்புக்களை உணர்ந்து பணியாற்றுகிறோம் நீங்களும் உங்களை அவ்வாறு அமைத்து கொண்டால் இறையருளால் நாம் எதிர்கொள்ளும் சவால்களை சர்வசாதரணமாக முறியடித்து விடாலாம்
இறைவன் அனைத்திக்கும் துணை நிர்ப்பானாக