இஸ்ஸதீன் றிழ்வான்
இனவாதமும் சர்வதிகாரமும் குடும்பவாதமும் இணைந்த இலங்கை அரசியல் மைத்திரி என்ற மாந்திரத்தால்முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானமும் சாத்வீகமும் கொண்ட ஒரு ஆரம்பத்தை எதிர்பார்த்தோம்,எதிர்பார்க்கின்றோம்.
சிறிய பெரிய கட்சிகளின் கோர்ப்பாய் இன்றைய அரசாங்கள் நகர்கிறது, முடிவுகள் எடுப்பதில் பாரியசர்ச்சைகளும் சுமைகளும் சேர்ந்தே சுழலுகிறது.
கூட்டிணைந்திருக்கின்ற கட்சிகளையும் பிரதிநிதிகளையும் திருப்திப்படுத்தவேண்டி இருப்பதால்தீர்மானங்களை எடுப்பதில் பாரிய சவாலைஇந்த அரசு முகங்கொடுக்கின்றது.
இதற்கு நல்ல உதாரணமாக மரிச்சிக்கட்டி வில்பத்து விவகாரம் அமைந்திருக்கின்றது.
மரிச்சிக்கட்டியில் முறையற்ற எந்த குடியேற்றங்களும் இடம்பெறவில்லை என்பதை ஆளும் அரசின் பலஅமைச்சர்கள் பரவலாக கருத்துவெளியிடும் போது அதற்கு மாற்றமான ஒரு கருத்தையே ஜனாதிபதிவெளிடிட்டிருப்பது இன்றைய அரசாங்கத்தில் தளம்பல் நிலையை சரியாக புரிந்துகொள்ள முடிகிறது.
ஜக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்திருக்கின்றது என்பதற்காக பெரும்பான்மை மக்களை பகைத்துக்கொண்டுகருத்து வெளியிடுவதும் செயற்படுவதும் எமது சமூகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதைஎமது அரசியல் பிரதிநிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இனவாதம் இன்னும் வளர்ந்துகொண்டிருக்கின்றது, அதை எப்படிஅடக்குவது என்று தெரியாமல் இந்த மைத்திரி அரசாங்கம் தடமாறுகிறது.
எது எப்படி இருந்தாலும் இந்த அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பையும்உரிய சுதந்திரத்தையும் தரும்என்பதை நம்பி நாம் ஒவ்வொருவரும் பொருப்புடன்செயற்பட வேண்டும்.