Breaking
Sat. Sep 21st, 2024

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

பொரளை பள்ளிவாசலின் கண்ணாடிகள் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான செய்தியை லங்கா சீ நியூஸ் என்ற விமல் வீரவன்ச சார்பு இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஆனால் அந்தச் செய்தியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஒரு தீரவாதியாக காட்ட முயற்சித்துள்ளமையை என்னால் உணரக் கூடியதாக உள்ளது.

பள்ளிவாசல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்றதும் அசாத் சாலி அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் அங்கு சென்றார். பின்னர் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு தேவையான உதவிகளை (ஆலோசனைகளை) அவர்கள் வழங்கினார்கள் என்று எழுதப்பட்டிருந்தது,

குறித்த செய்தி எழுதப்பட்ட விதத்தை படிக்கும் போது அமைச்சர் ரிஷாத்தை தீவிரவாதி போல் காட்டவே முயற்சிக்கப்பட்டுள்ளது. ரிஷாத்துக்கு எதிராக தென்னிலங்கை இனவாதிகளிடம் மேலும் அதிருப்தியை தோற்றுவிக்கும் ஓர் உந்தல் இந்தச் செய்தியில் காணப்படுகிறது.

ஒரு சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சர், கட்சியின் தலைவர், சமூகப்பற்றுமிக்க ஒருவர் இவ்வாறு ஆலோசனை சொல்வதில் என்ன தப்பு?

ஏன் இந்தப் பள்ளிவாசலை முன்னாள் ஆளுநர் அலவி மௌலானாவும் பார்வையிட்ட பின்னர் அவரும் பள்ளி நிர்வாகத்துடன் கலந்துரையாடி ஆலோசனை கூறினார்தானே?

அது இந்த இணையத்துக்கு தெரியாமல் போய் விட்டது போல்?மஹிந்தவும் ஞானசார தேரரும் கண்ணை மறைத்து விட்டார்களோ தெரியாது.

Related Post