இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் போராளிகளுக்கு இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.
இத்தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர எகிப்தில் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று, இடையில் போர் நிறுத்தமும் ஏற்பட்டது.
பின்னர் ஹமாஸ் போராளிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதில் ஹமாஸ் ராணுவத் தளபதி மொஹம்மட் டெய்ஃப் என்பவரின் மனைவியும் மகளும் பலியானார்கள். அவர்களுடன் மேலும் சில பொதுமக்களும் இறந்தனர்.
இந்நிலையில் இன்று இஸ்ரேலில் உள்ள பென் குரியோன் விமான நிலையம் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? என்ற தகவல் தெரியவில்லை.
இத்தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, சர்வதேச விமானங்கள் இந்த விமான நிலையத்திற்கு விமானங்களை இயக்க வேண்டாம் என்று ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் செய்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2069 பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்னர்.
(MM)