Breaking
Fri. Nov 15th, 2024

ஜப்பானில் திருடிவிட்டு தப்பிச் செல்ல முயலும் திருடர்களை பிடிக்க வினோதமான முறை ஒன்றை கையாளுகின்றனர்.

ஜப்பானில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், நகைக் கடைகள், துணிக்கடைகள் போன்ற வர்த்தக நிறுவனங்களில் பணம் செலுத்தும் நபர்களுக்கு அருகில் 2 ஆரஞ்சு வண்ணப் பந்துகளைப் பார்க்க முடியும்.

மேலும், ஆரஞ்சு வண்ண பந்துகள் உள்ள கடைகளில், ”ஜாக்கிரதை! இங்கு ஆரஞ்சு பந்துகள் உள்ளன”, என்ற எச்சரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தப் பந்துகள் நிச்சயமாக விற்பனை செய்வதற்காக அந்த இடத்தில் வைக்கப்படுவது இல்லை.

பின் எதற்காக அந்த பந்துகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன?

அந்த பந்துகள் திருட்டைத் தடுப்பதற்கும் திருடனைப் பிடிப்பதற்கும் உதவுகின்றன.

ஆரஞ்சு வண்ண பெயிண்ட்டால் அந்தப் பந்துகள் நிரப்பப்பட்டிருக்கின்றன.

திருடிவிட்டு தப்பி செல்லும் திருடர்கள் மீது அந்த பந்து வீசப்படுகிறது. இதனால் அந்த பந்தினுள் உள்ள பெயிண்ட் அந்த திருடர் மீது பரவி விடுவதால், அந்த நபரை எளிதாக பிடித்து பொலிசில் ஒப்படைக்க முடிகிறது.

எந்தக் கடையில் ஆரஞ்சு பந்துகளைப் பார்த்தாலும் அங்கே திருடர்கள் திருட நினைப்பதில்லை, இதன் மூலம் திருட்டுத் தடுக்கப்பட்டுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரஞ்சு பந்துகள் மூலம் கணிசமான அளவில் திருட்டைக் குறைக்க முடிந்திருக்கிறது என்று ஜப்பானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆரஞ்சு வண்ண பந்துகளை எப்படிக் கையாள்வது என்று அங்கே பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.

ஜப்பானில் சுமார் 8,500 கடைகளில் ஆரஞ்சு பந்துகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டுக்கு 1 லட்சம் பந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த ஆரஞ்சு பந்துகள், கடந்த 20 ஆண்டுகளாக ஜப்பானில் திருடர்களைப் பிடிக்கும் பணியில் உதவி செய்துவருகின்றன.

தற்போது வங்கிகள், காவல் நிலையங்களில்கூட இந்த ஆரஞ்சு வண்ண பந்துகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post