Breaking
Fri. Nov 15th, 2024

அப்துல் வாஹித் குத்தூஸ்

 கடந்த அரசாங்கத்தின் கல்வியமைச்சின் 2014/08/08 ந் திகதி இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலில் மலையகத்தின் பதினொரு மாவட்டங்களின் அனைத்து கல்வி வலயங்களிளுமுள்ள தமிழ் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக 3௦14 ஆசிரிய வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன . இதற்கமைய மலையக தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களில் முஸ்லிம் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளமை தொடர்பாக மலையக முஸ்லிம் கவுன்சில் மூலம் கடந்த 2015/03/25 ந் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் கவனத்திற்கு மேற்படி விடயங்களை கொண்டுவரப் பட்டது.

இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை எல் எஸ் ஹமீது அவர்களும் அக்கட்சியின் கிழக்கு மாகாண உறுப்பினர் சுபைர் அவர்களும் இன்று (2015/04/02) பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டுவந்தார்கள். அதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம அவர்களின் விஷேட குறிப்புடன் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப் பட்டு அமைச்சரவை பத்திரிகையொன்றின் மூலம் மலையக முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 2௦15/௦4/21 ந் திகதி இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் எம் எஸ் தௌபிக் ஆகியோருக்கும் இவ்விடயம் எத்திவைக்கப் பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் மற்றும் அமைச்சர் ரௌப் ஹகீம் மற்றும் மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவருட்பட தூதுக் குழுவினர் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களை சந்தித்து மேற்படி விடயம் சம்பந்தமாக குறிப்பிட்ட இந் நியமனங்களில் மலையக முஸ்லிம் பாடசாலைகள் முற்றாக புறக்கணிக்கப் பட்டுள்ள விடயங்கள் எடுத்துக் காட்டப் பட்டது.

மேலும் கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் பற்றாக் குறைகள் மற்றும் கொலன்னாவ பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் பாடசாலையை நிறுவுவதன் அவசியத்தையும் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அமைச்சர் ரவுப் ஹகீம் ஆகியோரால் எடுத்துக் கூறப்பட்டது.

இந்த சந்திப்பில் முஸ்லிம் அபேட்சகர்களுக்கு எதுவித அநீதியும் நடைபெறாது என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார். அதற்கிணங்க இதுவரை வழங்கப் பட்ட குறிப்பிட்ட நியமனங்களில் முஸ்லிம் விண்ணப்ப தாரிகள் சுமார் 21௦ பேருக்கு நியமனங்கள் வழங்கப் பட்டுள்ளன. இதன் இரண்டாம் கட்ட நியமனங்களின் போது மேலும் 23௦ பேருக்கான நியமனங்கள் வழங்கப் படவுள்ளதாக அமைச்சு வட்டாரங்களின் மூலமாக தெரியவருகின்றது.

அதேவேளை இந் நியமனகளில் முஸ்லிம் பாடசாலைகளின் வெற்றிடங்கள் நிரப்புவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் , கொலன்னாவ முஸ்லிம் பாடசாலை விடயமாக இதுவரை எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக கடந்த 2௦15/௦5/29 ந் திகதி வெள்ளிக்கிழமை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களை தொடர்பு கொண்டு அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் விசாரித்தார்.

அதற்கமைய எதிர்வரும் 2௦15/௦6/௦3ந் திகதி கல்வியமைச்ச்சரை அவருடைய அமைச்சு காரியாலயத்தில் நேரில் சந்தித்து உரிய விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை மேட்கொள்வதாக தெரிவித்தார். இந் நிகழ்வில் மலையக முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் , பதுளை ,வெளிமடை பிரதேச பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

Related Post