Breaking
Sat. Mar 15th, 2025

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்த கருத்தை ஊடகம் ஒன்றுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

அகதிக் கொள்கையை கடுமையாக கடைப்பிடித்தமை காரணமாகவே இந்த வருடத்துக்குள் ஒரு படகு மாத்திரமே அவுஸ்திரேலியாவுக்குள் வந்தது.

எனினும் கடந்த வருடத்தில் நூற்றுக்கணக்கான அகதிப் படகுகள் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்ததாக மொரிசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கையின் 157 அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்த முடிவையும் மொரிசன் நியாயப்படுத்தியுள்ளார்.

எனினும் குறித்த 157 அகதிகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு இருக்கும் என்பதால் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அகதி கொள்கைக்கு அது சவாலாக அமையும் என்று அகதிகள் சார்பான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post