Breaking
Mon. Dec 23rd, 2024

பொலிஸ் மா அதிபரினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள   நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவையும், அதனால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட சகல விசாரணைகளையும் அதிகாரமில்லாததாக செய்யுமாறும் வேண்டி நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அல்லே குணவங்ச தேரர், பேராசிரியர் காலோ பொன்சேகா ஆகிய இருவரும் இணைந்து குறித்த  மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை விசாரணை செய்து தீர்மானத்தை அறிவிக்கும் வரையில் இந்த பிரிவினால், முன்னெடுக்கப்படும் சகல விதமான நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறும் இந்த மனுவினல் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள இந்த மனு  குறித்த விசாரணை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது…

Related Post