Breaking
Mon. Dec 23rd, 2024

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீது பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­து­வ­தற்கு நாம் இட­ம­ளிக்க போவ­தில்லை. அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஒன்று அல்ல, நூறு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைகள் கொண்டு வந்­தாலும் எமக்கு பிரச்­சி­னை­யில்லை. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை தொடர்பில் தீர்­மானம் எடுக்கும் அதி­காரம் எம்­மி­டமே உள்­ளது என நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

பிர­தமர் மாத்­தி­ர­மின்றி முழு அர­சாங்­கத்­தையும் வீட்­டுக்கு அனுப்­பி­விட்டு புதிய பாரா­ளு­மன்­றத்தை உரு­வாக்­கு­வதே எமது நோக்­க­மாகும். இந்ந சந்­த­ர்ப்பத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை என்­பது அர்த்­த­மற்ற செய­லாகும். பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை யில்லா பிரே­ர­ணைக்கு பெரும்­பான்­மையோர் கையொப்­ப­மி­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சி யின் தலை­மை­ய­க­மான சிறி­க்கொத்­தாவில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின்போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ மேலும் குறிப்­பி­டு­கையில்,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக எதிர்க்­கட்­சி­யி­னரால் பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்பில் உண்­மைக்கு புறம்­பான செய்­திகள் தற்­போது பரப்­ப­ப்பட்டு வரு­கின்­றன.

நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது பல்­வேறு வாக்­கு­று­தி­களை நாம் மக்­க­ளுக்கு வழங்­கினோம். இதன்­பி­ர­காரம் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யானால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக்­கப்­ப­டுவார் என் றும் ஐ.தே.க தலை­மையில் புதிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­படும் என்றும் தேர்தல் விஞ்­ஞா­­பனத் தில் குறிப்­பிட்­டி­ருந்தோம். இதன்­ப­டியே ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக்­கப்­பட்­டாரே தவிர நினைத்­த­படி ஜனா­தி­பதி அவரை நிய­மிக்­க­வில்லை. ஜன­நா­ய­கத்தின் அடிப்­படை அறிவு கூட இல்­லாத எதிர்க்­கட்­சிகள் சிறுப்­பான்மை அர­சாங்கம் என்ற பெயரில் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இந்­நி­லையில் பெரும்­பான்மை அர­சாங்கம் செய்­யாத வேலைத்­திட்­டங்­களை சிறுப்­பான்மை அர­சாங்கம் என்ற வகையில் நாமே முன்­னெ­டுத்தோம். தற்­போது அனைத்து வாக்­கு­று­தி­க­ளையும் நிறை­வேற்றி விட்டோம். எனவே நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியின் பிர­காரம் பாரா­ளு­மன்றம் உட­ன­டி­யாக கலைக்­கப்­பட வேண்­டிய தேவை­யுள்­ளது. எமக்கு ஆட்­சியை தக்­க­வைத்துக் கொள்ள வேண்­டிய எந்­த­வொரு தேவைப்­பாடும் கிடை­யாது.

தற்­போ­தைய சிறுப்­பான்மை அர­சாங்­கத்­தினால் எந்த பிர­யோ­ச­னமும் இல்லை. எமது அர­சாங்­கத்தின் நல்­லாட்சித் திட்­டங்­க­ளுக்கு பெரும்­பான்மை பலம் கொண்ட எதிர்க்­கட்சி பெரும் முட்­டுக்­கட்­டை­யா­கவே உள்­ளது.

இதற்­க­மைய அர­சாங்­கத்­தினால் கொண்டு வரத்­திட்­ட­மிட்ட அனைத்து சட்­ட­மூ­லங்­களும் முடக்­கப்­பட்­டுள்­ளன. எமது தி்ட்டங்­க­ளுக்கு எதிர்க்­கட்சி ஆத­ரவு நல்க போவ­தில்லை. அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கும் கூட நாயை குளிப்­பாட்ட கூட்டிக் கொண்டு செல்­வது போன்று எதிர்க்­கட்­சி­களின் ஆத­ர­வினை திரட்­டினோம்.

எனினும் இந்த சந்­தர்ப்­பத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரு­வ­தென்­பது காலத்தை வீண­டிக்கும் அரத்­த­மற்ற செய­லாகும். இந்­நி­லையில் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக எதிர்க்­கட்­சி­யினர் ஒன்று அல்ல, நூறு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­களை கொண்டு வந்­தாலும் எமக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை. நாம் எதிர்க்­கட்­சி­களின் சிறுப்­பிள்­ளைத்­த­ன­மான காரி­யங்­க­ளுக்கு அஞ்­சப்­போ­வ­தில்லை.

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை விவா­தத்­திற்கு எடுக்கும் அதி­காரம் அர­சாங்கம் என்ற வகையில் எம்­மி­டமே உள்­ளது. ஆகையால் பிர­தமர் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை விவா­தத்­திற்கு எடுப்­ப­தற்கு நாம் இட­ம­ளிக்க போவ­தில்லை. பெரும்­பான்மை பலம் எதிர்க்­கட்­சி­க­ளிடம் இருப்­ப­தினால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வந்தால் நாம் தோல்வி அடை­வது யாவரும் அறிந்த விட­ய­மாகும்.

ஆகவே இந்த பாரா­ளு­மன்­றத்­தினால் எதுவும் செய்ய இய­லாது. இதன்­பி­ர­காரம் பிர­தமர் மாத்­தி­ர­மின்றி முழு அர­சாங்­கத்­தையும் வீட்­டுக்கு அனுப்­பி­விட்டு புதிய பாரா­ளு­மன்­றத்தை உரு­வாக்­கு­வதே எமது நோக்­க­மாகும்.

ஜீ.எல்.பீரி­ஸூக்கு விடுக்கும் சவால்

இதே­வேளை முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அர­சாங்­கத்­திற்கு் எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வரு­கிறார். எனினும் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் பான் கீ மூனிடம் யுத்த குற்றம் தொடர்பில் தருஸ்மன் குழு­வினை இலங்­கைக்கு வர­வ­ழைத்­தது மாத்­தி­ர­மின்றி அறிக்­கையை தயா­ரிக்­கு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல் பீரிஸே கோரி­யி­ருந்தார்.

இரா­ணுவ வீரர்­க­ளினால் வென்­றெ­டுக்­கப்­பட்ட நாட்டை காட்­டிக்­கொ­டுத்து விட்டு தேசப்­பற்­றுள்­ள­வர்­களை போன்று தம்மை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­கின்­றனர். இந்­நி­லையில் தற்­போது ஜீ.எல். பீரிஸ் நல்­லாட்சித் திட்­டங்­களை செயற்­ப­டுத்­த­வி­டாமல் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு சவால்களை விடுத்து வருகின்றார்.

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆட்சி அமைத்தாலும் தேசிய பட்டியலின் ஊடாக அமைச்சு பதவிபெற்றிருக்கும் ஒரேயொருவராக இவர் காணப்படுகின்றார். எமது இந்த ஆட்சியிலும் கூட அமைச்சு பதவி தருவதாக ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் கூட உடனே எமது வேலைத்திட்டஙகளுக்கு ஆதரவு நல்குவார்.

எனவே நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் முடியுமாக இருந்தால் முன்னாள் ஜீ.எல் பீரிஸ் பகிரங்க விவாததிற்கு வரவேண்டும் என்று சவால் விடுக்கின்றோம் என்றார்.

Related Post