ரஸீன் ரஸ்மின்
வுன்னி முஸ்லிம்களின கௌரவமான மீள்குடியேற்றத்திற்கும், மன்னார் மரிச்சிகட்டி முஸ்லிம்களின் சொந்த பூர்வீகத்தை பெற்றக்கொடுப்பதற்கும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து வேட்டை துணையாக இருக்க வேண்டும்.
எனவே, இலங்கையில் வாழும் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரும்பும் அனைவரும் தமது ஒப்பங்களையும் இட்டு அந்த மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட சமூக அபிவிருத்திக்கான மக்கள் அமைப்பு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் யுத்த காலத்தின் போது இடம்பெயர்க்கப்பட்டவர்கள், யுத்த இறுதியின போது வெளியேற்றப்பட்டவர்கள் ஒரு குறுகிய காலத்திற்கும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
ஆனால், கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1990ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு ஆதரவாக செயற்படவில்லை அல்லது அவர்களின் கட்டளைக்கு செவிசாய்க்கவில்லை என்பதற்காக உடுத்திய உடையுடன் வெளியெற்றப்பட்ட வன்னி முஸ்லிம்கள் இதுவைர காலமும் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றப்படவில்லை.
இதனால் கடந்த 25 வருடங்களாக எந்த சமூகமும் அனுபவித்திராத சிரமங்களை வன்னி முஸ்லிம்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள். வுன்னி முஸ்லிம்களின் பிரதிநிதியாக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மஹிந்த மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய அரசில் அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட வன்னியை பிரதிநிதித்துவப்படுத்ம் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சமூகததை சொந்த இடத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கு பல வழிகளிலும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ஆனால், இன்று வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கில் இனவாத சக்திகள் செயற்படுவதுடன், அந்த முஸ்லிம்;களை சொந்த மண்ணில் மீள்குடியேற்ற வேண்டும் என முயற்சிக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் குரலை நசுக்குவதற்கு அபாண்டங்களை சுமத்தி வருகிறார்கள்.
எனவே, இதுவிடயத்தில் புதிய அரசு கூட அக்கறை செலுத்தவில்லை என்பதும், வன்னி முஸ்லிம்கள் தமது வாழ்வுரிமைக்காக பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பதும் வேதனையைக் கொடுக்கிறது. எனவே, இந்த விடயத்தில் கட்சி, அரசியல் என்று வேறுபாடுகளுக்கு அப்பால் வன்னி முஸ்லிம்களின் கௌரமான மீள்குடியேற்றத்திற்கு சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டும்.
ஆத்துடன், அமைச்சரவையில் இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்கள் இந்த விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்து அந்த மக்களின் மீள்குடியேற்றம் காணி, வீடு உள்ளிட்ட சகல பிரச்சினைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இன்று இலங்கைக்கு அரபு நாடுகள் பொருளாதார ரீதியில் பல உதவிகளைச் செய்து கொடுக்கிறது. ஆனால் இந்த பிரச்சினை தொடர்பில் எந்தனை பாராளுமன்ற உறுப்பினர்;கள் அரபு நாட்டுத் தூதுவர்களிடம் பேசியிருக்கிறார்கள் என்பது கேள்வியாகும்.
எனவே, தாம நினைத்தபடி ஆடிக்கொண்டிருக்கின்ற இனவாதிகளின் செயற்பாடுகளை முடக்குவதற்கு என்ன வழிகளில் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த வழிமுறைகளை பயன்படுத்தி வன்னி முஸ்லிம்களின் மீளகுடியேற்றத்திற்கு அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.