Breaking
Mon. Dec 23rd, 2024

எம்.எம்.ஜபீர்

சர்வேதேச சிறுவர் தொழிலுக்கெதிராக தினத்தினை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில்  அம்பாரை மாவட்ட மூவீன சிறுவர்கள் கலந்து கொள்ளும் சிறுவர் ஊடக மாநாடு எதிர்வரும் புதன்கிழமை (10) 2.00 மணிக்கு காரைதீவு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
‘தற்காலத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மூவின சிறுவர்களும் ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு அறியப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
அம்பாரை மாவட்ட மனித அபிவிருத்தி தாபனத்தின் இணைப்பாளர் சீ.சிறிகாந் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் ஒய்வு பெற்ற சிரேஸ்ட அம்பாரை மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஏ.உதுமாலெவ்வை, கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்தின தேரர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் தம்மிக்கா குலத்துங்க, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட மேலும் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக கல்முனை பிராந்திய மனித அபிவிருத்தி தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம்.ஐ.றியாழ் தெரிவித்தார்.

Related Post