Breaking
Mon. Dec 23rd, 2024

காசியப்ப மன்னரின் கிரீடம் சிகிரிய பகுதியில் புதையல் ஒன்றில் காணப்படுவதாகக் கூறப்பட்ட தகவலுக்கு அமைய, அந்த புதையலை எடுக்கச் சென்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக தம்புள்ள துணைப் பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களின் மோட்டார் வாகனம், முச்சக்கர வண்டி, தொலைநோக்கி உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, கல்கமுவ மற்றும் தம்புள்ள ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

துணைப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Post