Breaking
Mon. Dec 23rd, 2024

ஜெர்மனியை சேர்ந்தவர் இன்ஜ்போர்க் ஸில்ம் ரபோபோர்ட். தற்போது இவருக்கு 102 வயது ஆகிறது. பிறந்த குழந்தைகள் பராமரிப்பு நிபுணரான இவர் கடந்த 1938–ம் ஆண்டில் ‘பி.எச்.டி.’ ஆராய்ச்சி பட்டப்படிப்பு மேற்கொண்டார்.

அப்போது ஜெர்மனியை ‘நாஜி’ படைகள் ஆட்சி செய்தன. இவர் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனால் அவரது முயற்சி தடைபட்டது.

இதற்கிடையே இரண்டாம் உலகப் போருக்கு பின் அங்கு நாஜிக்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இவர் தொடர்ந்து பி.எச்.டி. பட்டம் படிக்க முயன்றார். ஆனால், வாழ்க்கை மாற்றம் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் அதை படித்து முடிக்க முடியவில்லை. இருந்தும் அவர் விடாமல் தன்னம்பிக்கையுடன் படித்து வந்தார்.

தற்போது அவருக்கு 102 வயதாகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த நேரடி ஒப்புவித்தல் தேர்வில் வெற்றி பெற்று பி.எச்.டி. தேர்வில் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து அவருக்கு ஹாம்பர்க் பல்கலைக்கழகம் நேற்று அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

இவர் தனது உழைப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி மூலம் படித்து 77 ஆண்டுகளுக்கு பிறகு கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கடந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஜெர்மனியில் மிக அதிக வயதில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் ஸில்ம் ரபோபோர்ட் பேசும் போது தள்ளாத வயதில் இந்த பட்டம் எனக்காக அல்ல. சர்வாதிகாரிகளால் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் கிடைத்ததாக கருதுகிறேன்’’ என்றார்.

Related Post