உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவுக்கு அண்மையில் மொராக்கோ நாட்டு மன்னர் வருகை தந்தார்.
அவரை வரவேற்க மன்னர் சல்மான் விமான நிலையம் சென்றார். இருவரும் சந்தித்து கொண்டபோது பத்திரிக்கையாளர்கள் முந்திக்கொண்டு படம் பிடிக்க முயன்றனர்.
அந்த சந்தர்பத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பத்திரிக்கையாளர் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரியை பணி நீக்கம் செய்து வேறு ஒரு அதிகாரியை அதிரடியாக நியமித்தார் மன்னர் சல்மான்.
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள மன்னர் சல்மான்…
“அதிகாரிகள் ஒழுக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், ஒழுங்கீனமாக நடந்து கொள்வதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது” – என்று தகவல் வெளியிட்டுள்ளார்.
காவல்துறை உயரதிகாரியாக இருந்தாலும் ஒழுக்கம் இல்லாதவர்களை நிர்வாகத்தில் வைத்திருந்தால் நிர்வாகம் சீர்குலையும் என்பதை மன்னர் சல்மான் உணர்ந்துள்ளார்.