Breaking
Sun. Jan 12th, 2025

‘‘துணைத்­த­லைவர் பதவி கிடைத்தால் ‘பிபா’ அமைப்பை சுத்­தப்­ப­டுத்த தயார்’’ என கால்­பந்து ஜாம்­பவான் மரடோனா தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­தேச கால்­பந்து கூட்­ட­மைப்பு (‘பிபா’) சுவிட்­ஸர்­லாந்தில் உள்­ளது. இதன் தலைவர் தேர்தல் சமீ­பத்தில் நடந்தது. இதில் அலி பின் அல்– ஹுசைன் விலகிக் கொள்ள செப் பிளாட்டர் 5ஆவது முறை­யாக தலைவர் ஆனார். இதைத் தொடர்ந்து பல்­வேறு ஊழல் செய்­திகள் வெளி­யாக செப் பிளாட்டர் ராஜி­னாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஆர்­ஜென்­டினா கால்­பந்து ‘ஜாம்­பவான்’ மர­டோனா கூறி­யதாவது:

அமெ­ரிக்க புல­னாய் வுத் துறை (எப்.பி.ஐ.) மற்றும் சுவிட்­ஸர் லாந்து பொலிஸார் இணைந்து தன்னை ‘பிபா’ தலை­மை­ய­கத்தில் வைத்து கைது செய்து விடுவர் என பிளாட்டர் பயந்து விட்டார் என்று நினைக்­கிறேன். இதனால் தான் ராஜி­னாமா செய்து விட்டார்.

எதிர்­வரும் தேர்­தலில் ஒரு­வேளை அலி பின் அல்–­ஹுசைன் தலை­வ­ராக தேர்வு செய்­யப்­பட்டால், நான் துணைத்­ த ­லைவர் ஆகி விடுவேன். இது­மட்டும் சரி­யாக நடந்தால் ‘பிபா’ மீதான அனைத்து களங்­கத்­தையும் சுத்தப்படுத்தி விடுவேன் இவ்வாறு மரடோனா கூறினார்.

Related Post