-SLTJ ஊடகப் பிரிவு-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பொது பல சேனாவினால் தொடரப்பட்டுள்ள மத நிந்தனை வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் சிங்கள மொழியில் ஆற்றிய ஒரு உரையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்ற குற்றச் சாட்டில் ஜமாத்தின் செயலாளர் உட்பட தலைமை நிர்வாகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று 11.06.2015 கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரனையில் வழக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மஹா நாயக்க தேரர்களிடம் சென்று மண்ணிப்புக் கோரினால் உடனடியாக வழக்கு முடிவுக்கு வந்து விடும் என்று நீதிபதி தெரிவித்த கருத்தை தவ்ஹீத் ஜமாத் தரப்பு வழக்கறிஞர்கள் குழு ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது.
குறித்த உரையில் தவறுதலாக பேசப்பட்ட விடயம் தொடர்பில் நீதி மன்றத்தில் தவ்ஹீத் ஜமாத் தரப்பு ஏற்கனவே வருத்தம் தெரிவித்து விட்ட நிலையில் எக்காரணம் கொண்டும் மஹாநாயக்க தேரர்களிடம் சென்று மண்ணிப்புக் கோர முடியாது. அது சட்டத்திற்கு உட்பட்டதும் அல்ல. ஆகவே தொடர்ந்தும் வழக்கை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என திட்டவட்டமாக தவ்ஹீத் ஜமாத் தரப்பு வழக்கறிஞர்கள் மன்றில் தெரிவித்தனர்.
குறித்த வழக்கு தொடர்பில் மஹாநாயக்க தேரர்களிடம் மண்ணிப்புக் கேட்க்கா விட்டால் சிறை தண்டனை தான் கிடைக்கும் என்றால் சிறை செல்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்பதையும் தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
வழக்கு விசாரனை மீண்டும் 06.08.2015 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரனையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன், மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அடங்கிய குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.