-நாகூர் ழரீஃப்-
இஸ்லாத்தின் தூய வழிகாட்டலிலும் வாழ்வியலிலும் குறைகளைத் தேடி அலையும் பொது பல சேனா இன்று, ஷரீஆ வங்கி முறையை தடை செய்ய வேண்டும் என மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஒரு செய்தி வாசிக்கக் கிடைத்தது.
உண்மையில் அவர்களது கோரிக்கைகளும் அபிப்பிராயங்களும் பரிதாபப்படவே வைக்கின்றன. அவர்களிடம் இனவாத வெறி வளர்ந்துள்ள அளவிற்கு பொருளியல் மற்றும் வங்கியியல் அறிவு கிடைக்கவில்லை.
2008 ஆண்டின் உலக நிதி நெருக்கடிக்கு ( Globel financial crisis ) மூல காரணமு, வின்னைத் தொடும் வட்டி அடிப்படையில் அமைந்த வணிக முறைமையேயாகும் என்பது அத்துறையினருக்குத் தெளிவு.
சர்வதேச முதலாலித்துவமும் சோஷலிசமும் கூட இன்று நடைமுறைச் சாத்தியமும் பாதுகாப்பும் கொண்ட இஸ்லாமிய பொருளியல் முறைமையை இழந்ததன் காரணமாகவே இவ்விழி நிலை ஏற்படக் காரணம் என்பதை ஏற்றுநிற்கின்றன.
பொருளாதாரத்தில் கொடிகட்டிப் பறந்த பிரான்ஸ், அத்துறையில் நோபல் பரிசினையும் கூடப் பெற்றுக் கொண்டது. எனினும் அதன் ‘சந்தைப் பொருளாதாரமும் நோட்டுக்களுக்கான நிபந்தனைகளும்’ எனும் தனது நூலில், வட்டியில்லாத பூஜ்சிய அடிப்படையிலான இஸ்லாமிய அடிப்படையிலான முறைமையே முற்றிலும் வெற்றியீட்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
வட்டி வங்கிகளில் இருந்து வெருட்சி கொண்ட முஸ்லிம், முஸ்லிம் அல்லாத வைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் இஸ்லாமிய வங்கிகளைத் தேடி அலைமோதுகின்றனர் என்று ‘ராய்ட்டர்’ செய்தி வெளியீட்டகம் குறிப்பிடுகின்றது.
வளைகுடா நாடுகளில் டுபாய் இஸ்லாமிய வங்கியின் வரலாற்றின் வளர்ச்சியையும் மக்கள் வரவேற் பும் உலகளவில் போதிய சான்றாகும்.
‘இஸ்லாமிய பொருளியலின்’ வெற்றியின் இரகசியத்தை மட்டும் சுருக்கமாக குறிப்பிடுவோமாயின் , நீதியானதும் நேர்மை நிறைந்ததுமான அமானிதப் பாதுகாப்பகபமாக, முதலீட்டாளருக்கு எவ்வகையிலான பாதிப்பும் தீங்கும் ஏற்படாத வண்ணம் சமூகப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு சுத்தமாதன பொருளியல் முறையாகும்.
எனவேதான் மேற்குலகு தனது வட்டி அடிப்படையிலான வங்கி முறையை இஸ்லாமிய மயப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. உதாரணமாக, பிரித்தானியாவில் அமைந்துள்ள முழுமையான ஷரீஆ அடிப்படையிலான வங்கி முறைமையை ‘பார்க்கிளைஸ்’ ( BARCLAYS ISLAMIC BANKING ) வங்கி கடைப்பிடிக்கின்றமையும், ஸ்கட்;லாந்தில் அமைந்துள்ளROYAL BANK OF SCOTLAND போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
பிpரித்தானியாவில் ஐம்பதுக்கும் அதிகமான நிதியியல் நிறுவனங்களும் கல்விக் கல்லூரிகளும் இஸ்லாமிய வங்கியியல் பற்றி பயற்சி நெறிகளை வழங்கி வருகின்றமை இதன் தேவையையும் அவசியத்தையும் உணர்த்துவதாகவும் மேற்படி நிதி நெருக்கடியில் இருந்து மீழ்வதற்கு இஸ்லாமிய நிதியியலால் மாத்திரமே தீர்வு காண்பிக்க முடியும் என்பதையும் உணர்த்துகின்றது எனலாம்.
ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் போன்ற பௌத்த தேசங்களில் கூட வேகமாக வளர்ந்து வரும் ஷரீஆ வங்கியியல் ஒரு தேவையாகவே பார்கப்படுகின்றதே தவிர ஒரு சுமையாகவோ இன விரோதப் போக்காகவோ கொள்ளப்பட வில்லை.
இஸ்லாம் எக்காலத்திற்கும் எச்சமுகத்திற்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்கியுள்ளதைப் போன்று எல்லாத் துறைக்கும் அதன் வழிகாட்டல் உள்ளது. நிதியியலில் அதன் வழிகாட்டல்களை விடச் சிறந்த வழிகாட்டல்கள் இருக்குமாயின் அதனை அமுல்படுத்துங்கள்.
நீதிமன்றங்களில் உங்களது சமயம் சார்ந்த நீதியியலைப் பயன்படுத்துங்கள்ளூ ஆங்கிலேயரதும் டச்சுக்களதும் சட்டத் தீர்ப்புக்களையும் தண்டனை முறைகளையும் விட்டு விடுங்கள்.
இஸ்லாத்தின் வழிகாட்டல் அல்லாத நிதியியல் நடைமுறைச் சாத்தியமான வெற்றிகரமான திட்டங்கள் இருக்குமாயின் ஏன் மேற்குலகு இதில் ஆர்வம் கொள்கின்றது?
எனவே, இனவாதம் என்று நோக்காது சமூக நோக்கு என்று சிந்திப்பதும் அது பற்றிய அறிவைத் தேடிப்படிப்பதும் காலத்தின் தேவையாகும் என்று பொது பல சேனாவினருக்குச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.