Breaking
Mon. Dec 23rd, 2024

– அபூ அஸ்ஜத் –

மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை தடுக்கும் வகையில் முஸ்லிம்கள் தொடர்பில் அபாண்டங்களை சுமத்தும் பௌத்த கடும் போக்கு சிங்கள அமைப்புக்களின் செயலணி கணடடித்தும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேர்மையான முறையில் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரித மாக மேற்கொள்ளய கோறும் வகையில் நாடு தழுவிய முறையில் 2 இலட்சம் கையொப்பங்கள் பெரும் வேலைத்திட்டத்திற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை ,கிண்ணியா,மூதுார் பிரதேசங்களிலும் மக்கள் தமது கையொப்பங்களை இட்டு வடபுல முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்கிவருகின்றனர்.

புலிகளால் கொடுரமாக தாக்கப்பட்டும்,உணர்கள் பறிக்கப்பட்டு அகதிகளாக மூதுார் முஸ்லிம் மக்கள் கிண்ணியா,கந்தளாய் பகுதிகளை நோக்கி வந்த போது அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த றிசாத் பதியுதீன் இம்மக்களுக்கு ஆற்றிய உதவிகளை நினைவுபடுத்தியும்,அதே போல் அவர் பிரதி நிதித்துவப்படுத்தும் வன்னி மக்களுக்கு இன்று இனவாதிகளினால் இழைக்கப்படும் அநியாயங்களை கண்டும் காணானது போல் இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் அப்பிரதேச மக்கள் இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கையொப்ப வேட்டையில் ஈடுபட்டனர்.

அதே வேளை குறிப்பாக பெண்கள் மறறும் அடையாள அட்டைகளை கொண்ட இளைஞர், பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தமது கையொப்பங்களை இட்டுள்ளனர்.
அதே வேளை நாளை மற்றும் மறுதினம் இரு தினங்களும்,வீடுவீடாக சென்று பெண்களின் கையொப்பங்களும் பெறப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related Post