அஸ்ரப் ஏ சமத்
கல்முனை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நகர அலுவலகமாக தரமுயர்த்தி 16.06.2015 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்படுகின்றது.
இவ் வைபவம் இன்று திங்கட் கிழமை நடைபெறவிருந்தும் சாய்ந்தமருதூரில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்ட்டதால் இவ் வைபவம் நாளை நடைபெற ஏற்பாடக உள்ளது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலியினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படும்.
;அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல். எஸ் ஹமீட் இவ் அலுவலகத்தினை தரமுயர்த்துமாறு பிரதியமைச்சர் அமீர்; அலியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கமைவாக பிரதியமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இவ் அலுவலகத்தை மீண்டும் தரமுயர்த்துவதற்கு வீடமைப்பு சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனைக்கினங்க இவ் அலுவலகம் திறந்து வைக்கப்படுகின்றது.
இந் நிகழ்;வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எஸ். பலன்சூரியவும் கலந்து கொள்வார்.
கடந்த 2006ஆம் ஆண்டில் இவ் அழுவலகம் மருதமுனை தொட்டு பொத்துவில் சம்மாந்துறை வரையிலான தமிழ் பேசும் மக்களது வீட்டுப்பிரச்சினைகள் சம்பந்தமாக செயலாற்றும் ஒரு நகர வீடமைப்பு அலுவலமாக செயல்படுவதற்காக முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரபினால் ஆரம்பிக்க்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சராக போறுப்பேற்ற காலத்தில் இவ் அலுவலகத்தை அம்பாறை அலுவலகத்தில் இனைந்திருந்தார். அத்துடன் கல்முனை வீடமைப்பு அலுவலகத்தை உப அலுவலகமாக தரம் இறக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.