Breaking
Fri. Nov 15th, 2024

-சித்திக் காரியப்பர் –

எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய வேண்டுமென்றும் அவ்வாறு நடைபெறாவிட்டால் எதிரான போராட்டம் வெடிக்கும் என்றும் சிங்கள ராவய என்ற இனவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

வில்பத்து தேசிய வனம் மற்றும் மடு பிரதேசம் ஆகியவற்றில் இயற்கை வளங்களை அழித்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட வேண்டும். கைது செய்யப்படாவிடின் குற்ற விசாரணைப் பிரிவின் முன்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் அந்த அமைப்பின் செயலாளர் நாயகமான மாகல்கந்த சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மாகல்கந்த சுதந்த தேரர் அவர்களே! கடந்த ஐக்நிகிய மக்கள் சுதந்நிதிர முன்நினணி அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காத வகையிலும் நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றியும் அரச மற்றும் தனியார் வங்நிகிநிகளில் இருந்து ஒரு இலட்நிசத்து 98 ஆயிநிரத்து 762 கோடி ரூபாவை கடனாகப் பெற்று நாட்டின் நிதிவளத்தையே சூறையாடியோர்கள் தொடர்பிலும் அவர்களைக் கைது செய்யுமாறும் நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டீர்களா?

கொமர்ஷல் வங்கியிடம் 140,220.5 கோடி ரூபா
தேசிய சேமிப்பு வங்கிக்கு 37,987.7 கோடி ரூபா (மீண்டும்)
தேசிய சேமிப்பு வங்கியிடம் 160 கோடி ரூபா (மீண்டும்)
தேசிய சேமிப்பு வங்கியிடம் 5,167.5 கோடி ரூபா (மீண்டும்)
இலங்கை வங்கியிடம் 2603.5 கோடி ரூபா
மக்கள் வங்கியிடம் 1897.1 கோடி ரூபா
ஹட்டன் நெஷனல் வங்நிகியிடம் 1,362.3 கோடி ரூபா
கொமர்ஷல் வங்கியிடம் 479.7 கோடி ரூபா (மீண்டும்)
தேசிய அபிவிருத்தி வங்கியிடம் 469.9 கோடி ரூபாநி
டி.எப்.சி.சி வங்கியிடம் 103.7 கோடி ரூபா

மேலும் 2980.3 கோடி ரூபாவை இலங்கை வங்நிகிக்கும் 4,410.9 கோடி ரூபாவை மக்கள் வங்நிகிக்கு 2014 டிசம்பர் 31க்குள் குத்நிதகை தொகைநியாக செலுத்த வேண்டியிருந்தமையை நீங்கள் அறிவீர்களா?.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் தேசிய சேமிப்பு வங்கிக்கு 13.8 கோடி ரூபாவும் கொமர்ஷல் வங்கிக்கு 19.3 கோடி ரூபாவும் தேசிய அபிவிருத்தி வங்நிகிக்கு 19.3 கோடி ரூபாவும் டி.எப்.சி.சி. வங்கிக்கு 115 கோடி ரூபாவும் இவ்வருடத்தின் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டியுள்ளதனையும் நீங்கள் அறிவீர்களா?

இது தவிர வியாபார முகாமைத்துவ தேசிய பாடசாலையினால் 286 கோடி ரூபா இலங்கை வங்கிக்கு 465.5 கோடி ரூபாவை வரையறுக்கப்பட்ட இலங்கைக் கப்பற் கூட்டுத்தாபனத்தினால் மக்கள் வங்கிக்கும் இவ்வருடத்தின் டிசம்பர் 31க்கு முன்பதாக செலுத்த வேண்டியுள்ளது.

மேற்படி கடன் தொகைகள் அனைத்தும் பாராளுமன்றத்தின் அனுமதியின்றியே அன்றைய அரசாங்கத்தினால் பெறப்பட்டுள்ளது என்பது உங்களின் ஞாபகத்துக்கு வராதுதானே? இவ்வளவு பெரும் தொகைப் பணம் கடனாக வங்கிகளிடமிருந்து பெறப்பட்டு எவ்வாறு செலவிடப்பட்டது? இதில் இடம்பெற்றுள்ள மோசடிகள் என்ன என்பது தொடர்பில் விபரங்களை வெளியிட வேண்டுமென்று நீங்கள் அனைவரும் மறிச்சிக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுங்கள். ஊழல் பேர்வழிகளைக் கைது செய்யுமாறு வலியுறுத்துங்கள்.

ஆனால்,இந்தப் பெருந்தொகை மக்கள் பணம், தேசிய சொத்து நாசமாக்கப்பட்டு, மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் நிச்சயமாக நீங்கள் மூடிமறைப்பீர்கள். ஏனெனெனில் இதன் பின்னணியில் உள்ள மேசாடிக் கும்பல்களில் பெரும்பாலானோர் சிங்கள பௌத்த அரசியல்வாதிகள் அல்லவா? அப்படித்தானே மாகல்கந்த சுதந்த தேரர் அவர்களே?

Related Post