நிறைவேற்று அதிகாரம்- அரசியலமைப்பு- சட்டம் நீதி மற்றும் ஊடகம் என்பவற்றினால் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி நடைபோடும் என பிரதி ஊடக அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சுக்களின் ஊடக செயலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- ஒரு அரசாங்கத்தை உருவாக்கத்தின் ஊடகம் பாரிய பங்களிப்பை வழங்குகிறது. அது நல்லபடியாக நடக்கவேண்டும்.
அரசியல்வாதிக்கு ஊடகம் மிகவும் அவசியம். அரசியல்வாதியின் ஒரு புகைப்படத்தினால் அவரை பற்றிய பாரிய எண்ணத்தை மக்களிடையே விதைக்க முடியும். அரசாங்கத்தையும் அரசியல்வாதியையும் காப்பாற்றும் பாரிய பொறுப்பு ஊடகத்திற்கு உள்ளது.
பத்திரிகை- தொலைக்காட்சி- வானொலி- மற்றும் சமுக வலைதளங்கறள் என்பன தகவல் அறிந்துகொள்வதற்காக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. எனவே இவை அனைத்தினூடாகவும் மக்களுக்கு தகவல் வழங்கவேண்டியது ஊடகத்தின் கடமை என்று அவர் மேலும் தெரிவித்தார்.