தனது திருடப்பட்ட ஐ போனை டிராக்கிங் அப் மூலம் கண்டுபிடித்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கனடாவை சேர்ந்த ஜெர்மி குக் என்ற 18 வயது இளைஞர், தன்னுடைய ஐ போனை வாடகை காரில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார். பிறகு அந்த எண்ணை தொடர்புகொள்ள முயன்ற போது போன் திருடப்படுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து தொலைந்து போன போனை கண்டுபிடிக்கும் டிராக்கிங் அப்ளிக்கேஷன் மூலம் போன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளார். பின்னர் அந்த இடத்திற்கு சென்று அங்கு நின்றுக்கொண்டிருந்த 3 இளைஞர்களிடம் போனை தரும்படிகேட்டுள்ளார்.
ஆனால் போனை தராமல் ஜெர்மி குக்கை காரில் கடத்தி சென்று, சற்று தொலைவில் இருந்த ஷாப்பிங் மால் அருகே சுட்டு கொன்றுவிட்டு, அங்கேயே உடலையும் வீசிவிட்டு சென்றுவிட்டனர். திருடப்பட்ட தனது ஐ போனை திரும்ப கேட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.